தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் தகராறு: 6 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 6 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 6 பேர் கைது


ADDED : அக் 22, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது மக்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபம் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த சசிதரன், 25; என்பது தெரியவந்தது. பின்னர், சசிதரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல், ரெட்டியார்பாளையத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், 35; முத்தியால்பேட்டை பகுதியில் தகராறில் ஈடுபட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த தமிழ்மணி,23; அரவிந்த், 31; ரெயின்போ நகரை சேர்ந்த நிவாஸ், 24; உருளையன்பேட்டையில் தகராறில் ஈடுபட்ட நெல்லித்தோப்பை சேர்ந்த இளங்கோவன், 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us