தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடங்களில் தகராறு: 9 பேர் கைது

பொது இடங்களில் தகராறு: 9 பேர் கைது

பொது இடங்களில் தகராறு: 9 பேர் கைது


ADDED : அக் 09, 2024 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் ரகளை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிகரன்,45; பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட இவர் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் பொதுமக்களிடம் ரகளை செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

அதேபோன்று தாகூர் கல்லுாரி மைதானம் அருகே தகராறு செய்து கொண்டிருந்த சாமிபிள்ளை தோட்டம் குமரன்,52; வானுார் ஆனந்த், 38; பாலசுப்ரமணியன், 40; கவியரசன், 40; சுந்தரமணி, 26; ஆகிய 5 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மேட்டுப்பாளையம் பகுதியில், பொதுமக்களிடம் தகராறு செய்த, அதேப் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 25; மணிவண்ணன், 33; முத்தியால்பேட்டை ராஜா முகமது,36; ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us