ADDED : டிச 31, 2025 03:26 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம், 56; இடம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கர். நேற்று முன்தினம் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அவர், எலி பேஸ்ட் சாப்பிட்டார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
