/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் அரசு பள்ளியில் புத்தகங்கள் வழங்கல்
/
சாரம் அரசு பள்ளியில் புத்தகங்கள் வழங்கல்
ADDED : நவ 14, 2025 11:34 PM

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளங்கோவன் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட இலக்கியம், பொது அறிவு, கதை, நாவல் ஆகிய புத்தகங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பத்மாவதி, பள்ளி முன்னாள் ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை ஆகியோர் குழந்தைகள் தினம் குறித்தும், வாசிப்பின் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

