/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் காய்கறி தொகுப்பு வழங்கல்
/
உழவர்கரை தொகுதியில் காய்கறி தொகுப்பு வழங்கல்
ADDED : மார் 31, 2025 07:39 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணன் நகரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு நன்கொடை, மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காய்கறிகளை சமூக சேவகர் டாக்டர் நாராயணசாமி வழங்கினார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணன் நகரில் பிரசித்தி பெற்ற ரட்சக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம் ஆண்டு மயான கொள்ள விழா நடந்தது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உழவர்கரை தொகுதி சமூக சேவகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் 5 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக நேரில் சென்று வழங்கினார்.
மேலும் ரட்சக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழாவிற்கு நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.