கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மார் 24, 2026 10:52 PM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு நடத்தினார்.
1950 உதவி எண், சி.விஜில் ஆப், பறக்கும் படை மற்றும் ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் மூலம் இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளன. அவை எப்படி கையாளப்படுகின்றன என, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்த கலெக்டர், எந்தப் புகாரையும் கிடப்பில் போடக்கூடாது என, உத்தரவிட்டார். புதுச்சேரி எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை திரையில் பார்த்து ஆய்வு செய்தார்.
எல்லைகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்களைப் பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, பணிகளைத் தொடர வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
