/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோதனை சாவடிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
/
சோதனை சாவடிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 08, 2026 06:55 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று தேர்தல் நடப்பதையொட்டி, மாநில எல்லையான முள்ளோடை சோதனை சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (9ம் தேதி) நடக்கிறது. தேர்தல் துறை சார்பில், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு நடைபெறும் அனைத்து ஓட்டுச் சாவடிகளும் தயாராக உள்ளன.
இந்நிலையில், மாநில எல்லையான முள்ளோடை சோதனைச் சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார். தேர்தலுக்காக 36 பறக்கும் படைகள், 30 இருசக்கர வானக பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, பாகூர், குருவிநத்தம் ஆகிய பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

