வாக்காளர்களுக்கு ஓட்டு பதிவு அழைப்பிதழ்: மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வழங்கல்
வாக்காளர்களுக்கு ஓட்டு பதிவு அழைப்பிதழ்: மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வழங்கல்
ADDED : ஏப் 05, 2026 11:16 PM

புதுச்சேரி: நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் சந்தித்து, ஓட்டுப் பதிவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. ஓட்டுப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குறைந்த ஓட்டுப் பதிவு உள்ள நகர்ப்புற பகுதியான, வெங்கட்டா நகரில் வாக்காளர்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் சந்தித்து, தேர்தலில் ஓட்டு பதிவு செய்திட, பாரம்பரிய முறையில் அழைப்பிதழ் கொடுத்தார்.
அப்போது, அவர், அனைவரும் தேர்தலில் ஓட்டு போட்டு, நுாறு சதவீத ஓட்டுப்பதிவினை அடைய உதவிட வேணடும். அதேபோல், மற்றவர்களையும் ஊக்குவித்து, அவர்களையும் தவறாமல் ஓட்டுப் போட வைத்து, புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், வெங்கட்டா நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குடு குடுப்பைகாரர் வேட மணிந்த தன்னார்வலர்கள், வெங்கட்டா நகர் பகுதியில், ஒவ்வொரு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியின் அழைப்பிதழினை கொடுத்தனர். ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தது.
