/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: காரைக்கால், புதுச்சேரி தெற்கு அணி வெற்றி

ADDED : ஜன 15, 2024 06:48 AM

புதுச்சேரி : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்.நிறுவனம் இணைந்து புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
அதில், நேற்று முன்தினம் (13ம் தேதி) இரவு 7:00 மணிக்கு நடந்த போட்டியில் காரைக்கால் அணியும், மாகே அணியும் மோதின.
முதலில் ஆடிய காரைக்கால் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்தனர். காரைக்கால் அணியின் ராம்பிரகாஷ் 23 பந்துகளில் 32 ரன்களும், ராஜாராம் 11 பந்துகளில் 30 ரன்களும் அடித்தனர்.
தொடர்ந்து, ஆடிய மாகே அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 152 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் காரைக்கால் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் அணியின் தமிழ் அழகன், ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி தெற்கு அணியும், புதுச்சேரி வடக்கு அணியும் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி வடக்கு அணி 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே அடித்தது.
தொடர்ந்து ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 98 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகன் விருதை நாராயண் லால் தட்டி சென்றார்.