/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட அளவிலான ேஹண்ட்பால் போட்டி
/
மாவட்ட அளவிலான ேஹண்ட்பால் போட்டி
ADDED : அக் 31, 2024 05:36 AM

புதுச்சேரி,: புதுச்சேரி மாநில அமைச்சூர் ஹேண்ட் பால் சங்கத்தின் சார்பில் 8 வது மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமிகள், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
முத்தியால்பேட்டை நியூ மாடன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
இதில்,அரியாங்குப்பம் மாவட்டம், காரைக்கால் மாவட்டம் அணிகள்இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுல் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் அணி முதலிடத்தையும், காரைக்கால் அணி இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, சங்க பொதுச் செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுல், பள்ளியின் முதல்வர் கஸ்துாரி பரிசுகள் வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர்கள் கேசவன்,இளவரசன், சங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், துணைத் தலைவர் ஆறுமுகம், இணை செயலாளர் மாறன், செயற்குழு உறுப்பினர் ராஜா,பள்ளியின் மாவட்ட செயலாளர்கள் ஜான் பியர் கருணை பிரகாசம், உடற்கல்வி ஆசிரியர் விமல்ராஜ், வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

