/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட அளவிலான தேக்வோண்டோ போட்டி
/
மாவட்ட அளவிலான தேக்வோண்டோ போட்டி
ADDED : ஜன 31, 2024 02:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், நடந்த மாவட்ட அளவிலான தேக்வோண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரி மார்ஷியல் ஆர்ட் கிளப் மூலம் மாவட்ட அளவிலான குறுகி மற்றும் பும்சே தேக்வோண்டோ போட்டிகள் நடந்தது.
லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில், புதுச்சேரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.பொது செயலாளர் மஞ்சுநாதன் முன்னிலை வகித்தார். முதன்மை நடுவர் பகவத்சிங் வரவேற்றார்.
தொழிலதிபர்கள் முத்து, சீனிவாசன், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகர், சி.இ.ஓ., முத்து கேசவலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அரவிந்த் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நந்தகுமார் செய்திருந்தார்.