தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாவட்ட ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி மேற்கு அணி வெற்றி

மாவட்ட ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி மேற்கு அணி வெற்றி

மாவட்ட ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி மேற்கு அணி வெற்றி


ADDED : ஜன 13, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி மேற்கு அணி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த, 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதில், புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என ஆறு அணிகள் பங்குபெற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த போட்டிகள், பேன்கோடு ஆப்பில், நேரலையாக ஒளிபரப்பாகிறது.

நேற்று மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி மேற்கு அணி மற்றும் மாகி அணிகள் மோதின.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்று மாகி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் ஆடிய மாகி அணி, 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் அடித்தது. அந்த அணியை சேர்ந்த ஷஹீர், 32 பந்துகளில் 54 ரன்களும், சஜு சோதன் 23 பந்துகளில் 22 ரன்களும் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கிய, புதுச்சேரி மேற்கு அணி, 19 ஓவர்களிலேயே, 7 விக்கெட்டுகளை இழந்து, 142 ரன்கள் அடித்தது. இதன் மூலம் அந்த அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

புதுச்சேரி மேற்கு அணியின் சதீஷ், 22 பந்துகளில் 39 ரன்களும், தேஷ் தீபக் 14 பந்துகளில் 27 ரன்களும் அடித்தனர்.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீஷூக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us