/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா
/
ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா
ADDED : ஏப் 15, 2025 04:30 AM

மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிறைவுசெய்யும் மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்யும் மாணவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரிவு உபசார விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரிச் செயலர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
முதல்வர் பூமாதேவி தலைமை தாங்கினார். துறைத்தலைவர்களும் பேராசிரியைகளும் மாணவிகளின் மூன்றாண்டுகால வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் மாணவிகள் கலைநிகழ்ச்சி நடத்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் முதலிடம்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.