/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜேந்திராஸ் நிறுவனத்தின் தீபாவளி ஆடை கண்காட்சி
/
ராஜேந்திராஸ் நிறுவனத்தின் தீபாவளி ஆடை கண்காட்சி
ADDED : அக் 06, 2024 04:32 AM

புதுச்சேரி: ராஜேந்திராஸ் நிறுவனம், தீபாவளி சிறப்பு ஆடை கண்காட்சியில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதுச்சேரி, ராஜேந்திராஸ் முதன்முறையாக தீபாவளிக்காக, முன் விற்பனை கண்காட்சியை, வள்ளலார் சாலையில் உள்ள நாதன் திருமண நிலையத்தில், நேற்று துவக்கியது. அங்கு பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட புடவைகள் மற்றும் ரெடிமேட் ஆடை வகைகள் அணி வகுத்து காணப்படுகின்றன.
கண்காட்சி குறித்து ராஜேந்திராஸ் உரிமையாளர் கூறுகையில், 'முதன்முறையாக புதுச்சேரியில் ராஜேந்திராஸ் நிறுவனம் புடவைகள், சல்வார் உள்ளிட்ட பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'டிரெண்டிங்'ரெடிமேட் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு தீபாவளியையொட்டி, குளு குளு வசதியுடன் கூடிய முன் விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது.
இங்கு அனைத்து ரக ஆடைகளும், சிறப்பு தள்ளுபடி விலையில், விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்' என்றார்.