/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அஸ்வின்சில் தீபாவளி கிப்ட் பேக் சிறப்பு விற்பனை துவக்கம்
/
அஸ்வின்சில் தீபாவளி கிப்ட் பேக் சிறப்பு விற்பனை துவக்கம்
அஸ்வின்சில் தீபாவளி கிப்ட் பேக் சிறப்பு விற்பனை துவக்கம்
அஸ்வின்சில் தீபாவளி கிப்ட் பேக் சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : அக் 18, 2024 06:16 AM

புதுச்சேரி: புதுச்சேரி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் பேக்கரியில் தீபாவளி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை துவங்கியது.
நிகழ்ச்சியில், அஸ்வின்ஸ் குழும நிர்வாக இயக்குநர்கள் செல்வகுமாரி, நிஷா, தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழும தலைவர் கணேசன், தீபாவளி சிறப்பு கிப்ட் பேக் விற்பனையை துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், 'பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்ட அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், கும்பகோணம், லால்குடி, முசிறி, துறையூர் உட்பட 39 கிளைகளில் செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு, இனிப்புகள் சிறப்பு கிப்ட் பேக் விற்பனை துவங்கியுள்ளது.
சுவையான பட்சணங்கள் டின் கண்டெய்னரில் விற்கப்படுகிறது. கிளாசிக் தீபாவளி கிப்ட் பேக் ரூ. 500, பிரீமியம் கிப்ட் பேக் ரூ.1050 விலையில் விற்கப்படுகிறது. தவிர, அய்டட் ஸ்வீட்ஸ், காஜூ, பக்லவாஸ், நெய் இனிப்புகள், ஸ்நாக்ஸ், சேவரீஸ் ஆகியவை கிடைக்கிறது.
மேலும் எலைட், நெய் மற்றும் பால், காஜா போன்ற சிறப்பு இனிப்புகள் விற்பனைக்கு உள்ளது. தீபாவளி இனிப்புகளுக்கு ஆர்டர்கள் அளிக்க அஸ்வின்ஸ் நிறுவனத்தின் அந்தந்த கிளைகள் அல்லது வாடிக்கையாளர் சேவையான 73730 41434, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.