/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கல்
/
முத்தியால்பேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கல்
முத்தியால்பேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கல்
முத்தியால்பேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கல்
ADDED : அக் 16, 2025 11:33 PM

புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு, முத்தியால்பேட்டை தொகுதி பயனாளிகளுக்கு, அ.தி.மு.க., சார்பில் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, முத்தியால்பேட்டை, காந்தி வீதி மார்க்கெட்டில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, தொகுதியை சேர்ந்த 12 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்கும் பணியை, அ.தி.மு.க., மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வையாபுரி மணிகண்டன் துவக்கினார்.
இதில், அ.தி.மு.க., மாநில இணைச் செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி தலைவர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் உதயசூரியன், வர்த்தக அணி தலைவர் செல்வம், மீனவர் அணி துணை செயலாளர் விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.