/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து
ADDED : அக் 31, 2024 05:51 AM
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை யொட்டி கவர்னர், முதல்வர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன், அனைவரும் பாதுகாப்பாக, காற்று மாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடி மகிழ வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாள் எல்லோருடைய வாழ்விலும், எல்லா வளமும், நலமும் மகிழ்ச்சியும் கொண்டு வந்து சேர்க்கும் நல்ல தொடக்கமாக அமையட்டும் என, தெரிவித்துள்ளார்.
இதேபோல், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், திருமுருகன், எதிர்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர், கம்யூ., செயலாளர்கள் சலீம், ராஜாங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.