ADDED : அக் 16, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுாரில் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது.
ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் லட்சுமி திருமண நிலையத்தில் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது.
வட்டார வளர்ச்சி அதிகாரி புத்தி அகில் தலைமை தாங்கி அங்காடியை திறந்து வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி வரவேற்றார். சாந்தமூர்த்தி நன்றி கூறினார்.
இந்த தீபாவளி அங்காடி வரும் 19ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.