/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி தொகுப்பு அமைச்சர் உத்தரவு
/
தீபாவளி தொகுப்பு அமைச்சர் உத்தரவு
ADDED : அக் 16, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி தொகுப்பு வழங்க குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ரேஷன் கார்டிற்கு சர்க்கரை, சமையல் எண்ணெய் தலா 2 கிலோ, கடலை பருப்பு ஒரு கிலோ, ரவை மற்றும் மைதா தலா அரை கிலோ உள்ளிட்டபொருட்கள் அடங்கிய தொகுப்பு தீபாவளிக்கு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 45 ஆயிரத்து 974 ரேஷன் கார்டுகளுக்கும் தீபாவளி தொகுப்பு வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இத்தொகுப்பு தீபாவளிக்குள் வழங்கப்படும் என, தெரிவித்துள்ளார்.