/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பரிசுத் தொகை பெறாத அமைப்பு; சாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு
/
தீபாவளி பரிசுத் தொகை பெறாத அமைப்பு; சாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு
தீபாவளி பரிசுத் தொகை பெறாத அமைப்பு; சாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு
தீபாவளி பரிசுத் தொகை பெறாத அமைப்பு; சாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 05, 2024 06:32 AM
புதுச்சேரி : தீபாவளி பரிசுத் தொகை பெறாத உறுப்பினர்கள், வங்கி கணக்கை சரி செய்து, சலுகையை பெறலாம் என, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலச்சங்க தொழிலாளர் அதிகாரி வேங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை உறுப்பினராக பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 2023ம் ஆண்டிற்கு புதுச்சேரி அரசு அறிவித்த தீபாவளி பரிசு தொகை தலா 1,000 ரூபாய் வீதம் நவ., மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
சில வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால், அந்த வங்கிகளின் ஐ.எப்.எஸ்.சி., எண் மாற்றப்பட்டுள்ளது.
எனவே அந்த வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்கள், இந்த தீபாவளி பரிசுதொகை கிடைக்க பெறாத உறுப்பினர்கள் வரும் 31ம் தேதிக்குள், புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கத்தினை நேரில் அணுகலாம்.
உறுப்பினர் அடையாள அட்டை, 2023ம் ஆண்டில் சந்தா கட்டிய ரசீது, தற்போதைய பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகம் (ஐ.எப்.எஸ்.சி.,எண்ணுடன்), ஆதார் நகல்களை சமர்பிக்க வேண்டும்.
சமர்பிக்க தவறும் உறுப்பினர்களுக்கு இத்தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
உறுப்பினர்கள் தங்களுடைய வங்கி கணக்கினை சரி செய்து சங்க அலுவலகத்தில் தெரிவித்து சலுகையை பெற்றுக்கொள் ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.