/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறப்பு
/
அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறப்பு
ADDED : அக் 14, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறக்கப்பட்டது.
கடலுார் சாலை அரியாங்குப்பம், சாமிக்கண்ணு தனம்மாள் திருமண மஹாலில், தீபாவளி பண்டிகையொட்டி, நேற்று அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது. சபாநாயக் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் அங்காடியை திறந்து வைத்தனர்.
இந்த அங்காடியில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேசன் உட்பட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.