/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனடாவிற்கு தபால் சேவை நிறுத்தம் கூரியரில் குவிகிறது தீபாவளி இனிப்பு
/
கனடாவிற்கு தபால் சேவை நிறுத்தம் கூரியரில் குவிகிறது தீபாவளி இனிப்பு
கனடாவிற்கு தபால் சேவை நிறுத்தம் கூரியரில் குவிகிறது தீபாவளி இனிப்பு
கனடாவிற்கு தபால் சேவை நிறுத்தம் கூரியரில் குவிகிறது தீபாவளி இனிப்பு
ADDED : அக் 15, 2025 01:09 AM
புதுச்சேரி : அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிற்கும் தபால் துறையின் பார்சல் சேவை ரத்து செய்யப்பட்டதால், தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் கூரியரில் அனுப்படுகிறது.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவிற்கு இந்தியா தபால் சேவை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது கனடாவிற்கும் தபால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெற்று வரும் தபால் துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக, இந்தியாவின் தபால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அதிகளவு இனிப்பு, காரம், துணி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கனடாவிற்கு பார்சலில் வரும் என்பதால், இதனை முன்னிறுத்தியே அந்நாட்டு தபால் துறையினர் தங்கள் நாட்டு அதிபரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக கனடா வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அஞ்சல் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா, கனடாவிற்கு அதிகளவு பார்சல் அனுப்பப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் பார்சல் சேவையை கடந்த 6ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி புதுச்சேரியில் இருந்து தற்போது தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே பார்சலில் பொருட்கள் செல்கிறது.
சாதாரணமாக தபால் துறை மூலம் கனடாவிற்கு ஒரு கிலோ பார்சல் அனுப்ப ரூ.1,935 மட்டுமே கட்டணம். இதுவே கூரியரில் அனுப்பினால் கிலோவிற்கு ரூ.6,000 வசூலிக்கப்படும்.
பெரும்பாலானோர் 20 கிலோவிற்கு மேல் பார்சல் அனுப்புவர். இந்நிலையில், தபால் துறையை விட கூரியரில் பல மடங்கு கட்டணம் அதிகமாக உள்ளதால், தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு பொருட்களை அனுப்புவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.