ADDED : பிப் 26, 2024 04:55 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவது, வரும் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்றுவது என, முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வழக்கறிஞர் அணி தலைவர் கணேசன், துணை தலைவர் தாமோதரன், துணை அமைப்பாளர்கள் முருகையன், சந்தோஷ்குமார், சுகந்தி, ஞானராஜன், சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
