/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 15, 2026 06:46 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் உத்தமன், தொகுதி துணை செயலாளர் செல்வம், தொகுதி பிரதிநிதி சிவகுமார், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், மாநில அமைப்புசாரா அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயமூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பினர் மனோகர் மற்றும் சிவலிங்கம், கிளை செயலாளர் வேலு, ஏகாம்பரம் காந்தி, ரெமோ, நாராயணன், மணிகண்டன், சங்கர், வாசு, ராஜ்குமார், பழனி, சுரேஷ், வினோத், சசிகுமார், கார்த்தி, விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

