கணுவாப்பேட்டையில் 2ம் நாளாக தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
கணுவாப்பேட்டையில் 2ம் நாளாக தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மங்கலம் தொகுதி கணுவாப்பேட்டையில் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் நேற்று 2ம் நாளாக மகளுடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மங்கலம் தொகுதியில் இண்டி கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் நேற்று 2ம் நாளாக கணுவாப்பேட்டை கிராமத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் தனது மகள் சத்யாவுடன் வீடு, வீடாக சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் ரங்கன் கணுவாப்பேட்டையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வளர்ச்சி மிகுந்த பகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.
ஓட்டு சேகரப்பின் போது, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத் தலைவர் புஷ்பா, தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
