தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., வேட்பாளர் கோபால் முத்தமிழ் நகரில் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் கோபால் முத்தமிழ் நகரில் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் கோபால் முத்தமிழ் நகரில் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 29, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 07:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கோபால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்து வருகிறார்.

அவர், நேற்று சஞ்சய்காந்தி நகர், அய்யனார் நகர், அம்மன் கோவில் வீதி, முல்லை நகர், சங்கோதியம்மன் கோவில் வீதி, முத்தமிழ் நகர், அருந்ததிபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

வாக்காளர்களிடம் பேசிய கோபால், மக்களின் அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் மாநில அமைப்பாளர் சிவா வழியில் செயல்படுத்தி நகரப் பகுதியில் முன்மாதிரி தொகுதியாக உருளையன்பேட்டையை மாற்றுவேன் என, உறுதியளித்தார். அவருக்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், துணைச் செயலாளர் கண்ணதாசன், இளையநம்பி, பிரகாஷ், கிளைச் செயலாளர் இளங்கோ, நிர்வாகிகள் கோபி, நவீன், உமாபதி, வனத்தையன், தனராஜ், முகிலன், ராஜன், மோகன், அலெக்ஸ், நல்குணா, குமார், மதிவாணன், காங்கிரஸ் நிர்வாகிகள் ரகுமான், கோவிந்தாராஜு, ரமேஷ், சைநாலேபின், அப்துல் ரஷீத், பழனி, ரபிவூக், முருகையன், ஷாபீ, யூசப், இம்ரான், ஆப்தார், அக்ரம், சுஹைப், யாசார், நௌபால், விநாயகம், ராகுல், பன்னீர் செல்வம், வி.சிறுத்தைகள் கட்சி செழியன், மணவாளன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us