கென்னடி நகரில் புதிய வடிகால் கட்டமைப்பு தி.மு.க., வேட்பாளர் கோபால் வாக்குறுதி
கென்னடி நகரில் புதிய வடிகால் கட்டமைப்பு தி.மு.க., வேட்பாளர் கோபால் வாக்குறுதி
ADDED : ஏப் 02, 2026 05:55 AM

புதுச்சேரி: உருளை ன்பேட்டை தொகுதி கென்னடி நகரில் வடிகால் கட்டமைப்பை மாற்றி அமைத்து நிரந்தர தீர்வு காண்பேன் என, தி.மு.க., வேட்பாளர் கோபால் வாக்குறுதி அளித்தார்.
உருளையன்பேட்டை தி.மு.க., வேட்பாளர் நேற்று சஞ்சய்காந்தி நகர், அய்யனார் நகர், அம்மன் கோவில் வீதி, முல்லை நகர், சங்கோதியம்மன் கோவில் வீதி, ராஜிவ்காந்தி நகர், இளங்கோ நகர், சாந்தி நகர், கண் டாக்டர் தோட்டம் பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கென்னடி நகரில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள வடிகால் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். என்னை தேர்ந்தெடுத்தால் தி.மு.க., அமைப்பாளர் சிவா வழியில் இப்பகுதி அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன். வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தி மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகாமல் நிரந்தர தீர்வு காண்பேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார். அப்போது தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், காங்., நிர்வாகிகள் ஆறுமுகம், சிவாஜி ராவ், மரி, சகுந்தலா, வி.சி., மணவாளன் உட னிருந்தனர்.
