பெண்களுக்கு கைவினைப் பயிற்சி பாகூர் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
பெண்களுக்கு கைவினைப் பயிற்சி பாகூர் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 05:19 AM

பாகூர்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைவினை தொழில் பயிற்சி அளிக்கப்படும் என, தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டு சேகரித்தார்.
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று இரண்டாவது நாளாக குருவிநத்தம் பகுதியில் வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் 'குருவிநத்தம் கிராமத்தில் புதிதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர், வடிகால் வசதிகள் ஏற்படுத்த தருவேன்.
வரதராஜ பெருமாள் நகர், ஆர்.ஆர்.நகர், சீரடி சாய்பாபா நகர்களில் நிலவி வரும் மின் பிரச்னையை சரி செய்யப்படும். இப்பகுதி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கவும், ரேஷன் கடை அமைக்கவும், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
