/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., வேட்பாளர் ரங்கன் தீவிர ஓட்டு சேகரிப்பு
/
தி.மு.க., வேட்பாளர் ரங்கன் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 26, 2026 09:07 PM

புதுச்சேரி: மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன் நேற்று சங்கரன்பேட்டை, மணக்குப்பம் கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் மங்கலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவராந்தகம் ரங்கன் நேற்று முன்தினம் தொகுதிக்கு உட்பட்ட கீழூர் கிராமத்தில் பிரசாரத்தை துவக்கினார்.
தொடர்ந்து, நேற்று 2வது நாளாக மங்கலம் தொகுதி சங்கரன்பேட்டை, மணக்குப்பம், மணிக்குப்பம் மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, கிழக்குத் தெரு, வடக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் வீடு, வீடாக சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அப்பகுதி விவசாய நிலத்தில் மணிலா அறுவடையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களிடம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் ஓட்டு சேகரித்தார். முன்னதாக, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் ரங்கனை பொது மக்கள், பெண்கள் மலர்துாவி வரவேற்றனர்.
இதில், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பா, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண், கீழூர் கிளைச் செயலாளர் வீரமுத்து மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

