தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய மனை பட்டா வழங்கிட நடவடிக்கை :  தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி

புதிய மனை பட்டா வழங்கிட நடவடிக்கை :  தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி

புதிய மனை பட்டா வழங்கிட நடவடிக்கை :  தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி


ADDED : மார் 29, 2026 04:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: வார்க்கால்ஓடை, புதுநகர் கிராம மக்களுக்கு புதிய மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுப்பேன் என தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., உறுதி அளித்து ஓட்டுகள் சேகரித்தார்.

பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று வார்க்கால்ஓடை, புதுநகர் பகுதியில் வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுகள் சேகரித்த போது அவர் கூறுகையில்'' வார்க்கால்ஓடை, புதுநகர் பகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக 54 லட்ச ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. வார்க்கால் ஓடை, புதுநகரில் மக்கள் இடவசதி இல்லாத சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு புதிய மனைப்பட்டா கொடுத்து அவர்கள் பொது பகுதியை போல் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிய நடவடிக்கை நடவடிக்கை் எடுப்பேன் என வாக்குறுதியாக அளித்தார்.

அருகாமையில் உள்ள காட்டுக்குப்பம் தொழில்பேட்டையில் அதிகப்படியான தொழில் நிறுவனங்களைக் கொண்டு வந்து இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாழ்வாதாரத்தை உயர்த்துவேன். கொடுத்த வாக்குறுதியை செய்து முடிப்பேன் எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுகள் அளித்து என்னை வெற்றி பெறசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள், பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us