/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூர்த்திக்குப்பத்தில் இலவச மனைப்பட்டா :தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
மூர்த்திக்குப்பத்தில் இலவச மனைப்பட்டா :தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
மூர்த்திக்குப்பத்தில் இலவச மனைப்பட்டா :தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
ADDED : ஏப் 04, 2026 08:22 PM

அ நிறம் | அளவு
பாகூர்: மூர்த்திக்குப்பம் கிராம மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டு சேகரித்தார்.
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று மூர்த்திக்குப்பம் கிராமத்தில், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், 'மூர்த்திக்குப்பத்தில் சாலை, வடிகால், கருமாதி கொட்டகை இது பணிகளை செய்து முடித்திருக்கிறோம். சில பணிகளை தொடங்கி இருக்கிறோம். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முருகர் கோவில் பின்புறம் தடுப்பு சுவர், மணப்பட்டு சுற்றுலா தளத்தை விரைவில் தொடங்கி வேலை வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
