பட்டாபிராமர் கோவிலுக்கு புதிய தேர் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
பட்டாபிராமர் கோவிலுக்கு புதிய தேர் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
ADDED : ஏப் 03, 2026 08:31 PM

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவிலுக்கு, புதிதாக தேர் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என, வாக்குறுதியாக அளித்து, தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டு சேகரித்தார்.
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று மதிக்கிருஷ்ணாபுரத்தில் வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் கூறுகையில் 'கடந்த 5 ஆண்டுகளில் மதிக்கிருஷ்ணாபுரத்தில் நீண்ட காலமாக இருந்த சுடுகாடு பிரச்னை, சாலை, வடிகால் பட்டா பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள பழமை வாய்ந்த பட்டாபிராமர் சுவாமி கோவிலுக்கு தேர் உருவாக்கி தர வேண்டும் எனவும், அதனுடன் மாரியம்மன் கோவில், புத்து கோவில், விநாயகர் கோவில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் செய்திட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை வரும் காலங்களில், செய்து முடிப்போம் என வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
