தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உத்திரவாகினிப்பேட் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் சிவா ஓட்டு வேட்டை

 உத்திரவாகினிப்பேட் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் சிவா ஓட்டு வேட்டை

 உத்திரவாகினிப்பேட் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் சிவா ஓட்டு வேட்டை


ADDED : ஏப் 01, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதி உத்திரவாகினிப்பேட் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் சிவா வீடு வீடாக ஓட்டு சேகரித்தார்.

'இண்டி' கூட்டணியில் தி.மு.க., சார்பில், வில்லியனுார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவா உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு சேகரித்து வருகிறார்.

இவர், ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், முத்துப்பிள்ளைப்பாளையம், அரும்பார்த்தபுரம், மல்லிகை நகர், ஒதியம்பட்டு, பெரியபேட், எஸ்.எஸ்.நகர், சிவகணபதி நகர், காவேரி நகர் பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார்.

அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

மாலையில், உத்திரவாகினிப்பேட் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதி யின் வளர்ச்சிக்கு தாம் செய்த பணிகளை பட்டியலிட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

முன்னதாக அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலை வசதி, விளையாட்டு திடல், ரூ. 22 கோடியில் ஏ.எப்.டி., குடிநீர் திட்டம் தொடங்கியது, வடிகால் வசதி, பள்ளிக்கட்டடம், ஹைமாஸ் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிய சிவா எம்.எல்.ஏ.,விற்கு நன்றி கூறினர்.

ஓட்டு சேகரிப்பின் போது இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us