தி.மு.க., வேட்பாளரின் மனைவி பெண்களிடம் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளரின் மனைவி பெண்களிடம் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 11:08 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அவரது மனைவி, பெண்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோபால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தொகுதி மக்களை சந்தித்து தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார். வேட்பாளர் மனைவி ஹேமாவதி, நேற்று தச்சர் வீதி, மார்க்கெட் வீதி ஆகிய பகுதியில் வீடு, வீடாக சென்று, கணவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஒட்டு கேட்டார்.
அப்போது அவர், தனது கணவர், தொகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஊக்கப்பரிசு வழங்குவது மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இத்தேர்தலில் அவரை வெற்றி பெறச் செய்தால், இந்த தொகுதியை முன்மாதிரியாக மாற்றி, மக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பார் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
