ADDED : பிப் 27, 2024 06:57 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, நாளை 28 ம் தேதி நடக்கும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் நிர்வாகிகள் பங்கேற்க மாநில அமைப்பாளர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி குறித்து தி.மு.க., சார்பில் ஒவ்வொரு அணியாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண நிலையத்தில் நாளை 28-ம் தேதி காலை 08.00 மணிக்கு நடக்கின்றது.
எனது தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் தலைமை மகளிர் அணிச் செயலாளர் ஹைலன்டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
ஆகவே,லோக்சபா தேர்தலை மையமாக வைத்து நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க., மகளிர் அணி,தொண்டர் அணி நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளில் பங்கேற்றிருக்கும் மகளிர்கள் என தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் அனைத்து நிலையில் உள்ள மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
