/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., பொதுமக்களுக்கு உணவு வழங்கல்
/
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., பொதுமக்களுக்கு உணவு வழங்கல்
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., பொதுமக்களுக்கு உணவு வழங்கல்
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., பொதுமக்களுக்கு உணவு வழங்கல்
ADDED : டிச 02, 2025 04:40 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதையடுத்து மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.,மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொய்யா குளம், மகாத்மா நகர், எல்லையம்மன் நகர், சின்னையன்பேட், முத்துலிங்கம்பேட்டை, சேம்பல்பேட், புதுப்பேட், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் வீடு வீடாக சென்று உணவும், மழையால் ஒழுகும் வீடுகளுக்கு தார்ப்பாய் மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார்.
தொகுதி செயலாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் இளம்பரிதி, திருலோகச்சந்தர், குடியரசு, சுரேஷ், சிவசங்கரன், தமிழ்தாசன், முருகையன், செல்வம்,முத்து, சிவதாசன், பிரதாப், ராமமூர்த்தி, வீரபாண்டியன், இளங்கோவன், மார்ட்டின், சந்தோஷ், பிரகாஷ், சண்முகம், ராஜா, பாலாஜி, சுப்ரமணியம், மாநில அயலக அணி துணை அமைப்பாளர் சிவா, முன்னாள் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

