/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க., ஆதரவு இல்லை; எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு

ADDED : டிச 25, 2024 04:12 AM
புதுச்சேரி: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க., ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரி புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் கேட்ட நிதி இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசு தனது பேரிடர் நிதி தொகுப்பில் இருந்து அனைத்து குடும்பத்திற்கும்ரூ. 5,000 நிவாரணம் வழங்கி உள்ளது. சேதம் அடைந்த வீடுகள், கால்நடைகளுக்குநிவாரணம் வழங்கப்படவில்லை.
சட்டசபை நடக்கும்போதுசபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவர். தற்போது சபை ஏதும் நடக்கவில்லை.நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்தவர்களும், சபாநாயகரும்ஒரே கட்சியினர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுப்பது, பதவி பெறுதல், ஆட்சி அதிகாரத்திற்கு வர பா.ஜ.,வில் உள்ள 'ஏ' மற்றும் 'பி' டீமிற்கு இடையே நடக்கும் பிரச்னை.
சுயேச்சைகள் மூலம் கடிதம் கொடுத்துள்ளனர். சுயேச்சைகளை நம்பி தி.மு.க., செல்ல முடியாது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எங்களுக்கு வேலை இல்லை. அதற்கு தி.மு.க., ஆதரவு இல்லை.
காங்., தீர்மானம் கொண்டு வந்தால், கட்சி தலைமையில் பேசி முடிவு செய்யப்படும்.லாட்டரி அதிபரின் அரசியல் புதுச்சேரியில் எடுப்படாது.இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளது. லாட்டரி அதிபருக்கு புதுச்சேரி மீது காதல் வர காரணம் தெரியவில்லை. 7 தொகுதியில் மட்டும் உதவிகள் கொடுப்பதை விட, 30 தொகுதியிலும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் வரவேற்கிறோம்'என்றார்.