ADDED : நவ 22, 2025 06:06 AM

புதுச்சேரி: தி.மு.க., மாநில செயற்குழு கூட்டம் நெல்லித்தோப்பில் நடந்தது.
மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன் வரவேற்றார். அவைத் தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் முன்னிலை வகித்தனர்.
மு ன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., மூர்த்தி, நந்தா சரவணன், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் முழுதும் வரும் 27ம் தேதி கல்வி, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, புதுச்சேரியில் திராவிட மாடல் அரசை நிறுவ தேர்தல் பணியை மேற்கொள்ள வந்துள்ள ஜெகத்ரட்சகனை வரவேற்று நன்றி தெரிவிக்கப்பட்டது.
பீகார் போன்று எஸ்.ஐ.ஆர்., மூலம் புதுச்சேரியில் ஓட்டு திருட்டை நிறுத்த எச்சரிக்கையாக இப்பணியில் முன்னின்று ஈடுபட வேண்டும். மாதம்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும். காலவதி மருந்துகள் வாங்கிய விவகாரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

