/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி ஆணையரிடம் தி.மு.க., நிர்வாகி மனு
/
நகராட்சி ஆணையரிடம் தி.மு.க., நிர்வாகி மனு
ADDED : நவ 27, 2025 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில், முத்தியால்பேட்டை ஒத்தவாடை வீதியில் இரண்டு மாதத்திற்கு முன், புதிதாக சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. அதையொட்டி, மின்துறை புதைவிட கேபிள் மற்றும் பொதுப்பணி நீர்வளத்துறையால் நிலத்தடி நீர் குழாய் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.
ஆனால், சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால், சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தண்ணீர் வீடுகளில் புகும் அபாயம் உள்ளது.
மேலும், ஒத்தவாடை வீதி பிரதான சாலை என்பதால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இதேபோல், முத்தியால்பேட்டை பகுதியில் நெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக, மாணிக்க முதலியார்தோட்டம், ஏழை மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களில் 5க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளன. இங்கு தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

