/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., நிர்வாகி முயற்சியால் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
தி.மு.க., நிர்வாகி முயற்சியால் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
தி.மு.க., நிர்வாகி முயற்சியால் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
தி.மு.க., நிர்வாகி முயற்சியால் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : டிச 06, 2025 05:34 AM

புதுச்சேரி: உருளையான்பேட்டை தொகுதியில் உடைந்த குடிநீர் குழாய் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் முயற்சியால் சரிசெய்யப்பட்டது.
புதுச்சேரி - கடலுார் சாலை, நீதிமன்ற வளாகம் அருகில் நடந்து வரும் மேம்பால பணிகளின் போது, உருளையான்பேட்டை தொகுதி, சுப்பையா நகர், ராஜிவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதிகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைந்தது.
குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைந்து, கடந்த 4ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபாலிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து குடிநீர் இணைப்பு சேதமடைந்த இடத்தை பார்வையிட்ட அவர், பொதுப்பணி துறையின் குடிநீர் பிரிவு அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஊழியர்களை வரவழைத்து, பழுதடைந்த இணைப்பை சரிசெய்ய கேட்டுக் கொண்டார்.
ஊழியர்கள் குடிநீர் குழாய் இணைப்பை சரிசெய்து மீண்டும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டது.
இதனால் சுப்பையா நகர், ராஜிவ்காந்தி நகர் மற்றும் இந்திரா காந்தி நகர் பகுதி மக்கள் தொகுதி பொறுப்பாளர் கோபாலை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.