/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிறந்த நாள்
/
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிறந்த நாள்
ADDED : ஏப் 14, 2025 04:20 AM

புதுச்சேரி:புதுச்சேரி மாநில தி.மு.க.,தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பிறந்த நாள் விழா உருளையன்பேட்டை தொகுதியில் நடந்தது.
தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். அவைத் தலைவர் எஸ்.பி., சிவகுமார், எம்.எல்.ஏ.,கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சி.பி.ஐ., மாநில செயலாளர் சலீம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்,மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, உருளையன்பேட்டை தொகுதி அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா கட்சி கொடி ஏற்றினார். தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு தள்ளுவண்டி, துப்புறவு தொழிலாளர்களுக்கு புடவை, காய்கறிகள், மளிகை பொருட்கள்,பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உருளையன்பேட்டை தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவாளர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.