sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு: வி.எச்.பி.,

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு: வி.எச்.பி.,

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு: வி.எச்.பி.,


ADDED : ஆக 11, 2025 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 03:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரியில் நடந்தது.

இதையடுத்து, அமைப்பின் வட தமிழக மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், செயலர் பாலமணிமாறன் கூறியதாவது:

விஸ்வ ஹிந்து பரிஷத்தின், 60ம் ஆண்டு நிறைவையொட்டி, ஆக., 16ல் கிருஷ்ண ஜெயந்தியை, தமிழக கிராமங்களில் கொண்டாட உள்ளோம்.

தீபாவளி பண்டிகையின் நான்காவது நாளில் வேல் பூஜை, விளக்கு பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும்; இதை ஆண்டுதோறும் நடத்துவோம்.

தமிழகத்தில், போலீசார் அனுமதி தர மறுத்ததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். தி.மு.க., அரசு ஹிந்து மதத்திற்கு எதிராகவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறது.

வரும் செப்., 7 முதல் 21 வரை, நாடு முழுதும் கலெக்டர்களை சந்தித்து, ஹிந்து கோவில் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது; என, மனு அளிக்க உள்ளோம். இதை, நாடு தழுவிய மக்கள் இயக்கமாக நடத்த இருக்கிறோம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us