sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி: பா.ஜ., மாநில துணைத் தலைவர் குஷ்பு ஆவேசம்

/

தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி: பா.ஜ., மாநில துணைத் தலைவர் குஷ்பு ஆவேசம்

தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி: பா.ஜ., மாநில துணைத் தலைவர் குஷ்பு ஆவேசம்

தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி: பா.ஜ., மாநில துணைத் தலைவர் குஷ்பு ஆவேசம்

13


UPDATED : ஜன 04, 2026 10:42 PM

ADDED : ஜன 04, 2026 10:39 PM

Google News

UPDATED : ஜன 04, 2026 10:42 PM ADDED : ஜன 04, 2026 10:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : 'தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி' என்று, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் நடந்த பா.ஜ., அனைத்து பிரிவு நிர்வாகிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி மீது, இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியின் செயல்பாடுகளால், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரதமரை திட்டுவதையே வேலையாக வைத்துள்ளார். ராகுல், ஒருபோதும் மோடிக்கு இணையாக வர முடியாது. ராகுல் எப்போதும், லோக்சபாவில் தப்பு தப்பாக பேசுகிறார். எதற்கெடுத்தாலும் ஓட்டுத்திருட்டு என்கிறார். அப்படியென்றால், காங்., வெற்றி பெற்ற கர்நாடகா மற்றும் கேரள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு திருட்டு இல்லையா? இதுதான் காங்கிரசின் நாடகம்.

தமிழகம், 2025 வரை, செலுத்திய வரி 4 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு, தமிழகத்துக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளது. மத்திய அரசு, பொதுமக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது; விவசாயிகள், பெண்கள், முதியோருக்கு உதவித்தொகை வழங்குகிறது. மத்திய பா.ஜ., அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும், பா.ஜ., மகத்தான வெற்றிபெறும். தி.மு.க., மக்களின் எதிரி மட்டுமல்ல; கடவுளுக்கும் எதிரி. இதற்கு உதாரணம் தான் திருப்பரங்குன்றம் விவகாரம். முதல்வர் ஸ்டாலினின் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கோவிலுக்கு செல்லலாம். ஆனால், மக்கள் வழிபட தடை போடுவார்கள். தாமரை மலராது என்று சொல்பவர்கள் மத்தியில், தாமரை மலர்ந்தே தீரும் என்று, நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.இவ்வாறு குஷ்பு பேசினார்






      Dinamalar
      Follow us