ADDED : ஜன 10, 2025 05:56 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பிறந்தநாள் விழா முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தி.மு.க., தொகுதி அலுவலகத்தில் நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில், பிரபாகரன் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிரபாகரனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க., மாநில அவைத்தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், அமுதாகுமார், உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக முத்தியால்பேட்டை தி.மு.க., சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. முத்தியா முதலியார் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10 நபர்களுக்கு தட்டு வண்டி, பெண்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் உத்தமன் செய்திருந்தார்.

