சுயேச்சை வேட்பாளரை தாக்கிய தி.மு.க.,பிரமுகர்களுக்கு வலை
சுயேச்சை வேட்பாளரை தாக்கிய தி.மு.க.,பிரமுகர்களுக்கு வலை
ADDED : ஏப் 10, 2026 06:45 PM

காரைக்கால்: காரைக்காலில் சுயேச்சை வேட்பாளரை தாக்கிய தி.மு.க., பிரமுகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்காலை சேர்ந்தவர் சமீர் (எ) அகமது அல்பாசி,45; காங்., கட்சியை சேர்ந்த இவர், காரைக்கால் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்ததும், மாலை தனது காரில் காமாராஜர் சாலை, பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் சென்றபோது, அங்கிருந்த தி.மு.க., பிரமுகர்கள் சிலர் காரை வழிமறித்து, தி.மு.க., கூட்டணிக்கு ஏன், தேர்தல் பணி செய்யவில்லை எனக் கேட்டு தாக்கினர்.
படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த காங்., வேட்பாளரான சக்திவேல் பிரபு மற்றும் அவரது தந்தை சுப்ரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீரை சந்தித்து நலம் விசாரித்தனர். இத்தாக்குதல் குறித்து சமீர் அளித்த பகாரின் பேரில், காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து, தி.மு.க., பிரமுகர்களான நிஜார் அலி, பர்வீஸ் உள்ளிட்போரை தேடி வருகின்றனர்.
