/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை புதுச்சேரியில் இன்று துவக்கம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை புதுச்சேரியில் இன்று துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை புதுச்சேரியில் இன்று துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை புதுச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : அக் 06, 2025 01:34 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தி.மு.க., சார்பில், 'உடன்பிறப்பே வா' பரப்புரையின் கீழ், புதுச்சேரியில் உறுப்பினர் சேர்க்கையை ஜெகத்ரட்சகன் எம்.பி., துவக்கி வைக்கிறார்.
மாநில அமைப்பாளர் சிவா அறிக்கை:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ., கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு மண், மொழி, மானம் காக்க, தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' பரப்புரை செய்யஉத்தரவிட்டுள்ளார். இப்பணியை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஜெகத்ரட்சகன் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, மாநில தி.மு.க., சார்பில், 'உடன்பிறப்பே வா' பரப்புரையின் கீழ் உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா இன்று 6ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது. ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் அண்ணாதுரை சிலை மற்றும் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதியில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கப்படுகிறது. உப்பளம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி நடக்கிறது.
நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகிக்கின்றனர்.
உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.