/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : அக் 15, 2025 07:22 AM
புதுச்சேரி : தி.மு.க., பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொள்ள தி.மு.க., மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' எனும் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 15ம் தேதி மாலை 3.00 மணியளவில் ஊசுடு தொகுதி உளவாய்க்கால் பகுதியில் துவங்குகிறது.
அதனைத் தொடர்ந்து இந்திரா நகர் தொகுதி, கதிர்காமம் தொகுதி, தட்சாஞ்சாவடி தொகுதி, லாஸ்பேட்டை தொகுதி, காலாப்பட்டு தொகுதி, காமராஜ் நகர் தொகுதி, ராஜ்பவன் தொகுதியில் நிறைவடைகிறது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைக்க உள்ளார்.
இதில், தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட அனைத்து தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.