/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் சிவா அழைப்பு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் சிவா அழைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் சிவா அழைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் சிவா அழைப்பு
ADDED : நவ 09, 2025 07:17 AM
புதுச்சேரி: தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு தி.மு.க., அமைப்பாளரும் , எதிர்கட்சி தலைவர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
தி.மு.க., தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., அரசிடமிருந்து மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியை காக்க உடன் பிறப்பே வா பரப்புரையை ஏற்படுத்தப்பட்டு, அதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.
இதுவரை 2ம் கட்டமாக 13 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. 3ம் கட்டமாக நாளை 9ம் தேதி அரியாங்குப்பம் தொகுதி யில் துவங்குகிறது. தொடர்ந்து பூரணாங்குப்பம், ஏம்பலம் தொகுதி; கரிக்கலாம்பாக்கம், பாகூர் தொகுதி; மதிகிருஷ்ணாபுரம், பாகூர், குருவிநத்தம், நெட்டப்பாக்கம் தொகுதிக்கு நெட்டப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. ஜெகத்ரட்சகன் எம்.பி., வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைக்கிறார்.
முகாமில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., நிர்வாகிகள் கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

