/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி அலுவலகத்தை பூட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., போராட்டம்
/
நகராட்சி அலுவலகத்தை பூட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., போராட்டம்
நகராட்சி அலுவலகத்தை பூட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., போராட்டம்
நகராட்சி அலுவலகத்தை பூட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., போராட்டம்
ADDED : ஜன 21, 2026 05:04 AM
புதுச்சேரி: குப்பைகளை அகற்றாததை கண்டித்து தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ., கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் வார அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தினர் குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை என, புகார் எழுந்தது.
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் சரிவர குப்பைகள் அகற்றுவதில்லை என, தொகுதி மக்கள் எம்.எல்.ஏ., சம்பத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று காலை சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் தொகுதி மக்கள் மரப்பாலம் சந்திப்பில் திரண்டனர்.
தொடர்ந்து, மரப்பாலம் சந்திப்பில் உள்ள நகராட்சி அலுவலகத்தை பூட்டி தர்ணா போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். அவர்களிடம், சம்பத் எம்.எல்.ஏ., கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தொகுதியில் குப்பைகளை வாராததால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. நாள்தோறும் குப்பைகளை அகற்றாமல் அரசு நிதியை வீணடிப்பதாக அவர், குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து, சம்பத் எம்.எல்.ஏ.,விடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இனி நாள்தோறும் சரியான முறையில் குப்பைகள் அகற்றப்படும் என, உறுதி அளித்தனர். அதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

