தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் விநியோக நேரத்தை மாற்றி அமைக்க தி.மு.க., மனு

 குடிநீர் விநியோக நேரத்தை மாற்றி அமைக்க தி.மு.க., மனு

 குடிநீர் விநியோக நேரத்தை மாற்றி அமைக்க தி.மு.க., மனு


ADDED : பிப் 17, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குடிநீர் விநியோகநேரத்தை மாற்றி அமைக்ககோரி பொதுப் பணித்துறை செயற் பொறியாளரிடம் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் மனு அளித்தார்.

அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

ஆண்டு தோறும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் 'ஸஹர்' என்ற அதிகாலை உணவிற்காக ஆயத்தமாவர். இந்த ஆண்டு புனித நோன்பு காலம் வரும் 19ம் தேதி துவங்குகிறது.வழக்கமாக பொதுப்பணித் துறை மூலம் காலை 6:00 மணிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நோன்பு காலங்களில் மக்கள் அதிகாலையிலேயே நீரைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், வழக்கமாகத் விநியோகம் செய்யப்படும் நேரத்தை மாற்றி, அதிகாலை 4:00 மணிக்கே குடிநீர் விநியோகம் அவசியமாகிறது.

எனவே, நோன்பு காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் விநியோக நேரத்தை அதிகாலை 4:00 மணி என மாற்றியமைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us